விஜயின் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு-கடுமையான சோதனை.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கொடைக்கானலில் நடைபெறும் ஜனநாயகன் படத்தின்படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் நேற்று மதுரை வந்தடைந்தார்.பின்னர் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்ப்பு அளித்தநிலையில் அவர் கொடைக்கானல் புறப்பட்டு சென்றார்.இன்று கொடைக்கானல் தாண்டிக்குடி மலை கிராம உச்சியில் தனியார் தோட்ட பகுதியில் தவெக தலைவரும் முன்னணி நடிகருமான விஜயின் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது, படப்பிடிப்பு பகுதியில் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உடன் உள்ளார், படப்பிடிப்பு நடைபெறும் பகுதிக்கு செல்லும் சாலையில் விவசாயம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் செல்லும் விவசாய பணியாளர்களை முழுமையான விசாரணைகளுக்குப்பின்னர் பாதுகாவலர்கள் அனுமதித்து வருகின்றனர்.
Tags : விஜயின் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு-கடுமையான சோதனை.