பட்டாசு ஆலை காவலாளி கொலை வழக்கில் ஒருவர் கைது

விருதுநகர் அருகே ஓ. கோவில்பட்டியில் அழகுமலையான் என்ற பட்டாசு ஆலையில் தங்கி பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டு பார்த்து வந்தவர் முத்தலாபுரத்தைச் சேர்ந்த பழனி முருகன் 43. இவர் கடந்த 20ம் தேதி காலை பட்டாசு ஆலைக்குள் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். உடலை மீட்டு ஆமத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் மாதவன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதேநேரம் பட்டாசு ஆலையில் காவலாளியாக பணியாற்றி வந்த நந்தீஸ்வரன் 66, என்பவரிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையை நடத்தியுள்ளனர். தொடர்ந்து கொலை குறித்து தமக்கு எந்த விவரமும் தெரியாது என மருத்து வந்த நந்தீஸ்வரன் ஒரு கட்டத்தில் மன உளைச்சல் அடைந்து ஆலை உரிமையாளர் கண்ணனிடம் பழனி குமாரை நான் தான் கொலை செய்ததாகவும் தன்னை எப்படியாவது காப்பாற்றுமாறு தெரிவித்துள்ளார் பழனிக்குமார் காவலாளி இடத்திற்கு வர வேண்டும் என்ற நோக்கில உரிமையாளரிடம் தன்னை பற்றி தவறான தகவல்களை தெரிவித்து வந்ததுடன் மதுபோதையில் அடிக்கடி தன்னிடம் தகராறில் ஈடுபட்டு வந்த பழனிக்குமார் சம்பவம் நடைபெற்ற தினம் வெளியே சென்ற பழனி குமாரிடம் தமக்கு மது வாங்க பணம் கொடுத்து விட்டதாகவும் ஆனால் மது வாங்காமல் தான்
குடித்துவிட்டு பணத்தில் அவரே மது அருந்திவிட்டு வந்து தன்னிடம் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரத்தில் கட்டையால் அடித்து கொலை செய்து விட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார்.
Tags :