வீட்டில் வெடிகுண்டு வீசியவர் கைது

திண்டுக்கல் மாவட்டத்தில் கடை வாடகை கேட்டவரின் வீட்டில் நாட்டுவெடி வீசிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பாலகிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள பாண்டியராஜன் என்பவருக்கு சொந்தமான கடையை, 5 ஆண்டுகளாக வாடகை கொடுக்காமல் நாகபாண்டி என்பவர் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வாடகை தருமாறு நாகபாண்டியிடம் கேட்டதற்கு, அவர் பாண்டியராஜன் வீட்டில் வெடிகுண்டு வீசியுள்ளார். இதுகுறித்த சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :