இயேசுவின் கொள்கைகள் மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி

இயேசுவின் தொண்டு சகோதரத்துவம் ஆகிய கொள்கைகள் மக்களுக்கு வழிகாட்டியாக விளங்குவதாக பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார் உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் பெரிய வெள்ளி இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் விடுத்துள்ள செய்தியில் இயேசுகிறிஸ்துவின் துணிவையும் தியாகத்தை நினைவு கூறும் நாள் பெரிய வெள்ளி என குறிப்பிட்டுள்ளார் தொண்டு சகோதரத்துவம் ஆகிய அவரது கொள்கைகள் மக்களுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக திகழ்வதாக தெரிவித்துள்ளார்.
Tags :