எட்டயபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.

by Staff / 29-08-2025 04:53:14pm
எட்டயபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. ஜாஸ்மின் என்ற பெயர் கொண்ட ஆலையில் சற்றுமுன்னர் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 4 கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவ இடத்தில் தொடர்ந்து பட்டாசுகள் வெடிக்கும் நிலையில் தீயணைப்பு துறையினரும், போலீசாரும் விரைந்துள்ளனர். முழுமையான சேத விவரங்கள் பின்னர் தெரியவரும்.

 

Tags : எட்டயபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து

Share via