திட்டக்குடி நகராட்சி நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்.

by Staff / 22-10-2025 11:12:06am
திட்டக்குடி நகராட்சி நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி நகர மன்ற தலைவராக இருந்து வருபவர் திமுகவை சேர்ந்த வெண்ணிலா கோதண்டம் இருந்துவருகிறார்.இவர் நகர்மன்றத்தலைவருக்கான பணிகளை சரிவர மேற்கொள்வது இல்லை, மாதாந்திர நகர மன்ற கூட்டத்தை சரிவர நடத்த தவறிவிட்டார், நகர மன்ற உறுப்பினர்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை மேற்கொள்வதில்லை, டெண்டர் விடுதல் தொடர்பான பணிகளை ஆலோசிக்காமலே தன்னிச்சையாக செய்து வருகிறார், நகராட்சியின் பணிகளை பினாமிகள் பெயரில் செய்து வருகிறார், சமூக நல்லிணக்கம் இல்லாமல் அலுவலகத்தில்  கோஷ்டி சேர்த்து செயல்பட்டு வருகிறார்” என இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அடுக்கப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக இன்று 
நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர நகராட்சியில் திமுகவைச் சேர்ந்த 11 உறுப்பினர்களும் அதிமுகவைச் சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும், சுயேட்சை உறுப்பினர்கள் ஏழு,  நகர்மன்ற உறுப்பினர்கள் நகராட்சியில் உள்ள நகர்மன்ற கூட்ட அரங்கில் கூட்டம் நடைபெற்று வருகிறது. அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் இருக்க நகராட்சி அலுவலகம் முன்பு 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு ஈடுபட்டதால் பரபரப்புஏற்பட்டுள்ளது.

திட்டக்குடி நகராட்சி நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்.
 

Tags : திட்டக்குடி நகராட்சி நகர்மன்ற தலைவிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்.

Share via