வால்பாறையில் காட்டு  யானை சாலையில்  நிற்பதால் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். 

by Staff / 22-10-2025 10:57:35am
வால்பாறையில் காட்டு  யானை சாலையில்  நிற்பதால் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். 

கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில் ஆனாச்சால் என்ற பகுதியில் கபாலி என்ற காட்டு யானை கடந்த மூன்று நாட்களாகளாக அந்த வழியே செல்லும் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்களை செல்ல விடாமல் சாலையில் நின்று பல மணி நேரமாக நிற்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி சாலக்குடி, கொச்சி போன்ற பகுதிகளுக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். பேருந்தை ஓட்டுநர் நிறுத்தி பேருந்தில் உள்ள பயணிகள் யானையை செல்பி எடுப்பதால் வனத்துறையினர் கேரளா அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து ஓட்டுனருக்கு அபராதம் விதித்தனார்.  அதுபோல் சாலக்குடியில் இருந்து வழுக்க பாறை வால்பாறை மற்றும் பொள்ளாச்சி வழியில் செல்லும்  சுற்றுலாப் பயணிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர். இதுகுறித்து கேரளா வனத்துறையினர் கூறுகையில் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என்றும், சாலை ஓரத்தில் நிற்கும் காட்டு யானைகளை  இடையூறு செய்து செல்பி எடுப்பது வாகனத்தில் ஒலிபெருக்கியை உபயோகிக்கவும் கூடாது என்று தெரிவித்தனர் மேலும் வனவிலங்குகளுக்கு  இடையூறு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.

 

Tags : வால்பாறையில் காட்டு  யானை சாலையில்  நிற்பதால் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். 

Share via