கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புக் குழு.

by Editor / 21-11-2024 10:29:37am
கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புக் குழு.

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் மற்றும் உபகரணங்களை ஆய்வு செய்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்.தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் மீட்புக் குழுவினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் எனவும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வண்ணம் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு பொதுமக்களின் உயிரையும் உடைமைகளையும் காப்பதில் முக்கியத்துவம் கொடுத்துச் செயலாற்ற வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.பொதுமக்கள் அவசர உதவிக்கு காவல் கட்டுப்பாட்டு அறைய எண் 100 அல்லது 7010363173 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

 

Tags : கன்னியாகுமரி மாவட்டத்தில் வெள்ள மீட்புப் பணிகளுக்கு தயார் நிலையில் உள்ள பேரிடர் மீட்புக் குழு

Share via

More stories