சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

by Editor / 28-11-2023 11:34:53pm
சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுரங்கத்தில் இருந்து ஒவ்வொரு தொழிலாளர்களாக அரை மணி நேரத்திற்குள் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். 17 நாட்கள் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளதையடுத்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி தீபாவளியை போல் கொண்டாடி வருகின்றனர். மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மாலை அணிவித்து முதல்வர் புஷ்கர் சிங் தாமி வரவேற்றார்.

 17 நாட்களாக கடந்து வந்த பாதை....

உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி 17 நாட்களாக நடைபெற்ற நிலையில், வெற்றிகரமாக அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், 17 நாட்களில் ஒவ்வொரு நிமிடமும் திக்…திக்…நிமிடங்களாக கடந்தன. மீட்பு பணி கடந்து வந்த பாதை என்ன… ?

நவம்பர் 12, மாலை 5.30 மணி – சில்க்யாரா வளைவு – பார்கோட் சுரங்கப் பாதையில் திடீர் நிலச்சரிவு

நவம்பர் 12, இரவு 8.30 மணி – சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கியதாக தகவல்

நவம்பர் 12, நள்ளிரவு 11.30 மணி – தேசிய பேரிடர் மீட்புப் படையினர் விரைவு

நவம்பர் 13, காலை 7 மணி – தொழிலாளர்களுக்கு குழாய் மூலம் ஆக்ஸிஜன் அளிக்கும் பணி தொடக்கம்

நவம்பர் 13, காலை 11 மணி – சம்பவ இடத்திற்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி விரைவு

நவம்பர் 15, காலை 7 மணி – மீட்புப் பணிக்கு டெல்லியில் இருந்த அமெரிக்க கனரக இயந்திரம் வரவழைப்பு

நவம்பர் 16, காலை 5 மணி – அதிக செயல்திறன் கொண்ட துளையிடும் இயந்திரத்தை நிறுவும் பணி தொடக்கம்

நவம்பர் 17, காலை 9 மணி – இயந்திர கோளாறால் மீட்பு பணி இடைநிறுத்தம்

நவம்பர் 18, காலை 11 மணி – அமெரிக்க கனரக இயந்திரம் அதிர்வு காரணமாக தோண்டும் பணி நிறுத்தம்

நவம்பர் 21, காலை 8 மணி – சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ வெளியானது

நவம்பர் 22,  அனைத்து தொழிலாளர்களும் மீட்கப்படுவர் என முதல்வர் புஷ்கர்சிங் தாமி நம்பிக்கை

நவம்பர் 28, 8 மணி – சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்கள் ஒவ்வொருத்தராக வெற்றிகரமாக மீட்பு

சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
 

Tags : சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Share via