தமிழக வெற்றிக்கழகம் ஆலோசனைக்கூட்டம்.

by Editor / 07-10-2024 09:55:02am
 தமிழக வெற்றிக்கழகம் ஆலோசனைக்கூட்டம்.

தென்காசி தெற்கு மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றிக்கழகம் சார்பாக மாநாடு குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.ஆலங்குளத்திலுள்ள தனியார் அரங்கத்தில்  மாநில பொதுச் செயலாளர்  N.ஆனந்த் ஆலோசனை படி நடைபெற்றது.இதில் நெல்லை மாவட்ட இளைஞரணி தலைவர்,தென்காசி மாவட்ட பொறுப்பாளர்  S.ராஜகோபால் ,தென்காசி மாவட்ட தொண்டரணி தலைவர் M.நியாஸ்,ஆலங்குளம் சட்டமன்றத் தொகுதி இசக்கி தலைமையில் நடைபெற்றது.முன்னதாக ஆலங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கு தொகுதி நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.மகளிர் அணிமுத்து செல்வி,ராஜம்,மாவட்ட நிர்வாகிகள் சுரேஷ், அலெக்ஸ் ஆலங்குளம் மத்திய  ஒன்றிய தலைவர் ராஜதுரை தெற்கு ஒன்றிய தலைவர் குணசேகர்  ஆலங்குளம் இளைஞரணி தலைவர் பொன் ரெவந்த் செல்வம் செயலாளர் சாரதி நல்லூர் சுடலைமுத்து   , புகழ் சேட். பிரவீன் ஆலங்குளம் மருதம்புத்துர் பத்திரகாளி  பாப்பாக்குடி ஒன்றிய நிர்வாகிகள் ஆலங்குளம் ஒன்றிய நிர்வாகிகள் கடையம்  மற்றும் ஆலங்குளம் சட்டமன்ற அனைத்து கழக நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.
 

 

Tags :  தமிழக வெற்றிக்கழகம் ஆலோசனைக்கூட்டம்.

Share via