சென்னை உயர்நீதி மன்றம் அசோக்குமார் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீது பதிலளிக்குமாறு தமிழக காவல்துறைக்கு உத்தரரவு
தமிழக வெற்றிக்கழக அரசை கவிழ்க்க திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் முயன்றதாக ஊத்தங்கரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில், சட்டமன்ற பேரவை தலைவருக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக செயல்பட 35 கோடி வரை லஞ்சம் தர முன் வந்ததாக அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார். இந்தப் புகாரை திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருநாவுக்கரசு உள்பட எட்டு பேரை கைது செய்திருந்த நிலையில், அவர்களுக்கு பின்னணியில் இருந்து செயல்பட்டவர் அசோக்குமார் என்று வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்த நிலையில் அசோக்குமார் உயர்நீதி மன்றத்தில் முன் ஜாமின் மனு அழைத்திருந்தார். அம்மனு தாம் தமிழக வெற்றிக்கழக எம்.எல்.ஏ வை நேரடியாக தொடர்புகொள்ளவோ பேரம் பேசவோ அல்லது மிரவற்றவோ இல்லை என்றும் தமக்கு எதிராக எந்த ஒரு நேரடி ஆதாரமும் இல்லாத பட்சத்தில் இதுபோன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் முன்னாள் அமைச்சரின் தம்பி என்ற ஒரே காரணத்திற்காக அரசியல் பலி வாங்கும் நோக்கோடு திட்டமிட்டு பொய் வழக்கு தன் மீது புனையப்பட்டு இருப்பதாகவும் அதனால் நேரடியாக இந்த வழக்கில் எந்த விதமான தொடர்பும் இல்லாத தன்னை நீதிமன்றம் நிபந்தனைக்கு உட்பட்ட முன் ஜாமின் வழங்குமாறு கூறியிருந்தார். இதற்கு உயர்நீதிமன்றம் அசோக்குமார் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு மீது பதிலளிக்குமாறு தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டதோடு மனு மீதான அடுத்த கட்ட விசாரணை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
Tags :


















