காவல்துறை அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகத்தினை மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைத்தார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, சென்னை எழும்பூரில் காவல்துறை சார்பில் கொடுக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட பின், எழும்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட காவல்துறை அருங்காட்சியகத்தினை மக்கள் பார்வையிடுவதற்காக திறந்து வைத்தார்.
இந்த அருங்காட்சியகத்தில், பிஸ்டல், ரிவால்வர் முதல் நவீன ரக துப்பாக்கிகள் ஆகியவை உள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள 178 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தை அருங்காட்சியகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து ரூ.7 கோடியில், சுமார் 36 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இரு தளங்களுடன் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags :



















