உள்ளாட்சி இடைத்தேர்தல் - வாக்காளர் பட்டியல் வெளியீடு

உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உட்பட 35 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 133 காலிப் பதவியிடங்களுக்கும், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 காலிப் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Tags :