திருமணம் முடிந்த 2 நாட்களில் புதுமாப்பிள்ளை மரணம்

தெலங்கானா மாநிலம், மஹபூபாபாத் மாவட்டத்தில் இஸ்லாவத் நரேஷ் என்ற இளைஞருக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் பெற்றோர் ஆசிர்வாதத்துடன் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று (மே.20) மோட்டார் ஒன்றை இயக்கும்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். திருமணமான 2 நாட்களிலேயே மாப்பிள்ளை இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :