பயணிகள் ரயிலில் தீ விபத்து:

பீகாரில் உள்ள கிஷன்கஞ்ச்-கதிஹார் ரயில் பிரிவின் கீழ் உள்ள கைசல் ரயில் நிலையத்தில் இன்று (மே 20) பயணிகள் ரயில் எண் 75720-இல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிலிகுரியில் இருந்து கிஷன்கஞ்ச் நோக்கி ரயில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென ரயிலின் எஞ்சினில் தீப்பற்றி எறிந்தது. இந்த சம்பவம் பயணிகளிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக, இதுவரை பெரிய உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. மேலும், இவ்விபத்திற்கான காரணத்தை இன்னும் அதிகாரிகள் அறிவிக்கவில்லை.
Tags :