350 கோடியில் சர்வதேச தரத்துடன் உருவாகும் திருப்பதி ரயில் நிலையம்

by Staff / 01-06-2022 12:17:15pm
350 கோடியில் சர்வதேச தரத்துடன் உருவாகும் திருப்பதி ரயில் நிலையம்

சர்வதேச வசதிகளுடன் 350 கோடி ரூபாய் செலவில் அமையவுள்ள திருப்பதி ரயில் நிலையத்தின் மாதிரி புகைப்படத்தை ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவி நேற்று வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இந்த ரயில் நிலையம் இருபத்திமூன்று லிப்ட் 20 எக்ஸ்லேட்டார்கள்  100 க்கு மேற்பட்ட சிசிடி கேமரா காத்திருப்பு அறைகள் உணவகங்கள் ஓய்வு அறைகள் பூங்கா வாகன நிறுத்துமிடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் பிரம்மாண்டமாக அமைய உள்ளதாக தெரிவித்துள்ளார். சர்வதேசத் தரத்துடன் அமைய உள்ள திருப்பதி ரயில் நிலையம் பணிகளுக்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo