சிறுமி பலாத்காரம் - 73 வயது முதியவர் அடித்துக் கொலை

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 73 வயது முதியவரை, சிறுமியின் உறவினர்கள் அடித்துக் கொன்றனர். பெங்களூரு கிழக்கு பகுதியை சேர்ந்த குப்பண்ணா என்பவர் உயிரிழந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணியளவில் மாடியில் காயப்போட்டிருந்த பள்ளிச் சீருடையை எடுக்கச் சென்ற சிறுமியை குப்பண்ணா சில்மிஷம் செய்தார். சிறுமியை காணாததையடுத்து, தேடிப்பார்த்த போது குப்பண்ணா வீட்டில் சிறுமியை கண்டுபிடித்தனர்.தொடர்ந்து, சிறுமியின் உறவினர்களால் தாக்கப்பட்ட குப்பண்ணா திங்கள்கிழமை காலை வீட்டில் சடலமாக கிடந்தார்.குப்பண்ணா மீது பாலியல் வழக்கும், சிறுமியின் உறவினர்கள் சார்பில் கொலை வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags :