பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக பஸ் தீப்பற்றி எரிந்ததில் கண்டக்டர் உடல் கருதி உயிரிழந்தார்.

by Staff / 10-03-2023 04:49:32pm
பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக பஸ் தீப்பற்றி எரிந்ததில் கண்டக்டர் உடல் கருதி உயிரிழந்தார்.

மாநகர போக்குவரத்துக் கழக பஸ் நேற்று இரவு கடைசி டிரிப் முடித்து விட்டு லிங்கதிரனஹள்ளி பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்க பட்டது. பஸ்சில் டிரைவர் மற்றும் கண்டக்டர் இருவரும் பஸ்ஸில் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று காலை 5.30 மணிக்கு டிரைவர் சிறுநீர் கழிக்க சென்று திரும்பி வந்த போது, பஸ் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதைக் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது என்று புரியாமல் அருகில் இருந்த பஸ்சில் இருந்த போக்குவரத்து கழக ஊழியர்களை எழுப்பினார். அவர்கள் வருவதற்குள் பஸ் முழுவதும் மளமளவென எரிந்து கொண்டிருந்தது. உடனே தீயணைப்புப் நிலையம் மற்றும் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். 

தகவல் கிடைத்ததும் தீயணைப்புப் வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். ஆனால் பஸ்சில் படுத்து தூங்கி கொண்டிருந்த கண்டக்டர் முத்தையா சாமி வயது 45 உடல் கருகி தீ கட்டையாக இருந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பேடரஹள்ளி போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். என்ன காரணத்திற்காக பஸ் தீப்பற்றி எரிந்து என்று போக்குவரத்து கழக மின் பிரிவு பொறியாளர்கள் பரிசீலனை செய்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் போக்குவரத்து கழக அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via