மக்களவையில் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடைபெற்ற சிறப்பு விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

by Admin / 08-12-2025 04:11:05pm
மக்களவையில் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடைபெற்ற சிறப்பு விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.

இன்று மக்களவையில் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடைபெற்ற சிறப்பு விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார்.  இந்த பாடல் இந்திய சுதந்திர போராட்டத்தி.ற்கு பெரும் உத்வேகத்தையும் நாட்டிற்கு சக்தியையும் அளித்த ஒரு மந்திரம் என்று பிரதமர் மோடி பெருமதித்தோடு விவரித்தார் வந்தே மாதரம் என்பது வெறும் வார்த்தை அல்ல என்றும் அது ஒரு ஆற்றல் என்றும் கனவு என்றும் அது வரலாற்றையும் நிகழ் காலத்திலும் இணைகிறது என்றும் அவர் கூறினார். பாடலின் ஐம்பதாவது ஆண்டு காலத்தில் நாடு அடிமை தலையில் இருந்தது என்றும் நூறாவது ஆண்டு நிறைவின்போது 1975 ஆம் ஆண்டு நாட்டில் அவசரநிலை பிராடகம் செய்யப்பட்டு ஜனநாயகம் நசுக்கப்பட்டதாகவும் தேசபக்தர்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்றும் அவர் சுட்டிக் காட்டியதோடு 150 ஆண்டு விழா கொண்டாட்டம் நாட்டின் பெருமையையும் மாபெரும் புதிய அத்தியாயத்தையும் புகழையும் மீட்டு எடுப்பதற்கான ஒரு வாய்ப்பாக அமைந்தது என்றும் இந்த பாடல் நாட்டை வடக்கு முதல் தெற்குவரையிலும் கிழக்கு முதல் மேற்குவரையிலும் ஒன்றிணைத்தது என்றும் எப்போதும் ஒற்றுமையாக இருக்க இது ஒரு தூண்டுகோலாக உள்ளது என்றும் வலியுறுத்தினார்.. வந்தே மாதரம் பாடலை நினைவு கூறும் 150 ஆண்டை ஓராண்டு கால கொண்டாட்டங்களை நவம்பர் 7ஆம் தேதி 2025 புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள் விளையாட்டு அரங்கில் பிரதமர் தொடங்கி வைத்து நினைவு அஞ்சல் தலையையும் நாணயத்தையும் படியிட்டார். இந்நிகழ்வின் போது பாரதியாரின் காணி நிலம் வேண்டும் பராசக்தி என்று அடிமைப்பட்டு இருந்த இந்தியாவை மீட்டெடுக்க தமிழ் கவிதைகள் வழி அவர் முயன்றதையும் காலணி ஆதிக்கத்திற்கு எதிராக தம் சொந்த கப்பலை இயக்கி விடுதலைக்கு போராடியவர் வ .உ. சிதம்பரம்பிள்ளை என்றும்  அவர் குறிப்பிட்டார் 

 

Tags :

Share via

More stories