ராகுல்காந்தி வழக்கு ஒத்திவைப்பு
மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு சூரத் பெருநகர நடுவா் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது. இந்நிலையில், எம்.பி. பதவியை இழந்த ராகுல்காந்தி அவதூறு வழக்கில் தன்னை குற்றவாளியாக அறிவித்த தீர்ப்புக்கு தடை விதிக்க அவர் கோரியிருந்தார். மேலும், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சூரத் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, 2 ஆண்டு சிறைத்தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு மே 2க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Tags :