நக்சல்களுடன் மோதல்.. இரண்டு வீரர்கள் பலி

ஜார்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தின் பைரியோ காடுகளில் புதன்கிழமையன்று திரித்யா சம்மேளன தலைமைக் குழுவைச் சேர்ந்த நக்சல்கள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதை ஐஜி அமோல் வி ஹோம்கர் உறுதிப்படுத்தினார். காயமடைந்த வீரர்கள் தலைநகர் ராஞ்சியில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டனர்.
Tags :