விசாரணைக்கு உத்தரவு - ராஜ்நாத் சிங்

by Editor / 09-12-2021 12:35:36pm
 விசாரணைக்கு உத்தரவு - ராஜ்நாத் சிங்

ஹெலிகாப்டர் விபத்து - மக்களவையில் விளக்கம்

"சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து பிபின் ராவத் உள்ளிட்டோர் பகல் 11.45 மணிக்கு புறப்பட்டனர்"
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக மக்களவையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததற்கு மக்களவையில் இரங்கல்.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உடல் இன்று மாலைக்குள் டெல்லி கொண்டுவரப்படும். மக்களவையில் பாதுகாப்புத் துறை அமைச்சர்  ராஜ்நாத்சிங் விளக்கம்.

   “பகல் 12.15 மணிக்கு ஹெலிகாப்டர் தரையிறங்கியிருக்க வேண்டும்,12.08க்கு தொடர்பு துண்டிக்கப்பட்டது.
குருப் கேப்டன் வருன் சிங்கிற்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,“விமானப்படைத் தளபதி சவுத்ரி நேற்றிரவு சம்பவ இடத்தை ஆய்வு செய்துள்ளார்,விபத்து குறித்து முப்படை விசாரணை மேற்கொள்ளப்படும்,முழு ராணுவ மரியாதையுடன் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடக்கம் செய்யப்படும்

 
 

 

Tags :

Share via

More stories