ரூ.420 கொடுத்து திருமணம் செய்யும் மணமகன்.

by Staff / 07-10-2022 04:02:03pm
 ரூ.420 கொடுத்து திருமணம் செய்யும் மணமகன்.

மிசோரம் மாநிலத்தில் பின்பற்றப்படும் பல்வேறு பழக்க வழக்கங்களை பா.ஜனதா மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் ஆச்சரியத்துடன் பகிர்ந்தார். மகளிர் அணி தலைவியாக இருப்பதால் அனைத்து மாநிலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்து வரும் வானதி சீனிவாசன் கடந்த 2-ந்தேதி வடகிழக்கு மாநிலமான மிசோரம் சென்றார்.

அங்குள்ள நிலைமை, மக்கள் வாழ்க்கை பற்றி அவர் கூறியதாவது:- வங்கதேசம், மியான்மர் ஆகிய இரு நாடுகளையும் மணிப்பூரையும் எல்லையாக கொண்டுள்ளது மிசோரம். வெறும் 8 மாவட்டங்கள் தான். மக்கள் தொகையும் 12 லட்சம்தான். மிசோ என்ற பழங்குடியின மக்கள்தான் அதிகமாக வாழ்கிறார்கள். இங்குள்ள 8 மாவட்டங்களில் 10 மொழிகள் பேசுகிறார்கள். ஆனால் எல்லா மொழிகளையும் எல்லோரும் புரிந்து கொள்கிறார்கள்.

மிசோ பழங்குடியினர் 95 சதவீதம் கிறிஸ்தவர்களாக மாற்றப்பட்டுள்ளார்கள். ஆங்கிலம் சரளமாக பேசுகிறார்கள். மிசோ பழங்குடியினரின் திருமண முறை விசித்திரமாக இருக்கிறது. பழங்குடியின மக்களிடம் ஒரு விநோத வழக்கம் இருக்கிறது. ஆண், ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால், அந்தப் பகுதியில் உள்ள வலிமை வாய்ந்த விலங்கு ஒன்றை வேட்டையாடிக் கொல்லும் அளவுக்கு வீரம் மிக்கவனாக இருக்க வேண்டும்.

வீரம் தான் ஆணுக்கு திருமணத்திற்கான தகுதியை அளிக்கிறது. மிசோ பழங்குடியினர் மிதுன் என்ற விலங்கை வேட்டையாட வேண்டும் என்ற வழக்கம் இருந்துள்ளது. இப்போது அந்த வழக்கம் இல்லாததால், வேட்டையாடுவதற்கு பதிலாக, மணப்பெண்ணுக்கு, மணமகன் ரூ. 420 கொடுக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர்.

 

Tags :

Share via