உடல்நிலை குறித்துமதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீடியோ வெளியிட்டுள்ளார்.

by Editor / 29-05-2024 08:10:06am
உடல்நிலை குறித்துமதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீடியோ வெளியிட்டுள்ளார்.

'நான் நலமாக இருக்கிறேன்.. பரிபூரண ஆரோக்கியத்தோடு மீண்டு வருவேன்' என உடல்நிலை குறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வீடியோ வெளியிட்டுள்ளார். கடந்த 25ஆம் தேதி நெல்லையில் தனது சகோதரர் வீட்டில் வைகோ தங்கியிருந்த போது, கால் இடறி விழுந்ததில் அவருக்கு தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், இன்று (மே 29) அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்துள்ளது. இதனிடையே வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வைகோ, தனது உடல்நிலை குறித்து விளக்கியும், அவர் நலனை விரும்பும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி பாராட்டியும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

Tags : உடல்நிலை குறித்துமதிமுக பொதுச் செயலாளர் வைகோ

Share via

More stories