அரை நிர்வாணமாக்கி தாக்கப்பட்ட பெண்
மணிப்பூரில் மீண்டும் வன்முறை தலை தூக்கியுள்ளது. மணிப்பூர் மாநிலம் மெயின்புரியில் உள்ள கர்ஹால் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், சில இளைஞர்கள் ஒரு இளம்பெண்ணை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்கு அந்த பெண் ஒப்புக்கொள்ளாமல் மறுத்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர்கள் அந்த பெண்ணை அரை நிர்வாணப்படுத்தி அடித்து உதைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்த தப்பித்து வந்த அந்த பெண் தன்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ள நிலையில் அந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :