தமிழக வெற்றி கழகத்தின் கட்சி நிர்வாகிகளுடன் கட்சி தலைவர் நடிகர் விஜய் ஆலோசனை

by Admin / 03-11-2024 12:00:59pm
 தமிழக வெற்றி கழகத்தின் கட்சி நிர்வாகிகளுடன் கட்சி தலைவர் நடிகர் விஜய் ஆலோசனை

: தமிழக வெற்றி கழகத்தின் தலைமையகமான பனையூரில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் கட்சி தலைவர் நடிகர் விஜய் ஆலோசனை நடத்த உள்ளாா்.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து  மாவட்டங்கள் தோறும் பொதுக் கூட்டங்களை நடத்துவது குறித்தும், தற்போது உள்ள சூழலில் மாற்றுக் கட்சியின்  விமர்சனங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.  தற்பொழுது விஜய் எச். வினோத் இயக்கத்தில் தளபதி 69 பட வேலைகளில் இருப்பதால் பட வேலைகள் முடிந்த பின்ன கட்சியினுடைய கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான சூழல்களை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

 இந்நிலையில், விடுதலைக்கு சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுன் அம்பேத்கர் பற்றிய நூலை எழுதி வரும் ஆறாம் தேதி விஜய் வெளியிட அதை திருமாவளவன் பெற்றுக் கொள்வதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .அவர் இந்த கூட்டத்தில் அது குறித்தும் விவாதிப்பார் என்றும் செய்தி.

 

Tags :

Share via