புத்தரின் புனித பொருள்கள் வெறும் தொல்பொருள்கள் மட்டுமல்ல. -பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி புத்தாண்டின் முதல் பொது நிகழ்வாக புத்தரின் புனித சின்னங்களை காப்பதில் இந்தியா கொண்டுள்ள அர்ப்பணிப்பை புது தில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் நடைபெற்ற ஒளியும் தாமரையும் விழித்தெளிந்தவரின் புனித சின்னங்கள் என்ற சர்வதேச கண்காட்சியை தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அப்போது அவர் புத்தரின் புனித பொருள்கள் வெறும் தொல்பொருள்கள் மட்டுமல்ல. அவை இந்தியாவின் மதிப்பிற்குரிய நாகரீக பாரம்பரியத்தின் ஒரு பகுதி என்றும் பிரதமர் குறிப்பிட்டதோடு சுமார் 125 ஆண்டுகளுக்குப் பிறகு பிப் ரக்வா புனிதச் சின்னங்கள் இந்தியாவிற்கு திரும்பி உள்ளது. அடிமைத்தனம் நமது கலாச்சார விழுமியங்களை அழித்த போதிலும் இந்தியா அவற்றை தொடர்ந்து பாதுகாத்து வருவதை காட்டுகிறது என்றும் புத்தரின் போதனைகள் அடங்கிய பாலி மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதன் மூலம் தத்துவங்களை மக்களிடையே எளிதாக கொண்டு செல்ல அரசு முயன்று வருகிறது என்றார் .இன்றைய உலகப் பிரச்சனைகளுக்கு புத்தரின் போதனைகளை தீர்வு என்றும் இந்தியா எப்போதும் உலகிற்கு புத்தரையே வழங்கி உள்ளது, யுத்தத்தை அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார்.. அணைக்கவே மாட்டேனே சாரநாத், குஷி நகர், கபில வஸ்து போன்ற முக்கிய புத்தர் வழிபாட்டு தளங்களை நவீனமாக்கி உலகெங்கிலும் உள்ள யாத்திகர்களுக்காக ஒரு ஒருங்கிணைந்த புத்தர் சுற்றுப்பாதை உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.. இந்தியா புத்தரின் பாரம்பரியத்தை பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல் அவரது மரபுகளை தாங்கிச் செல்லும் ஒரு நாடு என்று பிரதமர் மோடி பெருமிதம் பட பேசினார்.
Tags :



















