திமுக புதிய செயலியை முதலமைச்சர் அறிமுகப்படுத்தினாா்.

by Admin / 04-01-2026 12:49:43am
திமுக புதிய செயலியை முதலமைச்சர் அறிமுகப்படுத்தினாா்.

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளுக்காக புதிய செயலியை அண்ணா அறிவாலயத்தில் அறிமுகப்படுத்தினாா்.. இச் செயலியின் நோக்கம் பொதுமக்கள் விவசாயிகள் வணிகர்கள் மற்றும் சமூகத்தின் பல்வேறு தரப்பினமிருந்து தேர்தல் அறிக்கைக்கான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெறுவதற்காக இது உருவாக்கப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மற்றும் குரல் வழி கருத்துக்களை பதிவு செய்ய வசதி கொண்ட தளமாகும்.. இணையதள வழியாகவும் கருத்துக்களை இணையதள வழியாகவும் கருத்துக்களை பதிவு செய்யும் தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் 08069446900 என்ற எண் மூலமும் ஆலோசனை அனுப்பலாம் என்றும் டி. எம். கே மெனிபெஸ்டோ2026@ டி .எம் ..கே .டாட் ..இன் என்ற மின்னஞ்சல் முகவரிக்கும் கருத்துக்களை அனுப்பலாம். இக்குழுவின் தலைவராக கனிமொழி கருணாநிதி எம்பி உள்ளார். 12 பேர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo