ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி - அரசு சராமாரி கேள்வி

பேரணிக்கு அனுமதி கோரி RSS தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை நடைபெற்றது. RSS அமைப்பு பதிவு செய்யப்பட்டதா? எந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது? அல்லது தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்ற கட்சியா? என அரசுத் தரப்பு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. பேரணியில் கலந்துகொள்பவர்கள் யார்? எத்தனை பேர் இருப்பார்கள்? எங்கு தொடங்கி எங்கு முடியும் என்ற எந்த விபரமும் இல்லாமல் அனுமதி கேட்கிறார்கள் என அரசுத்தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், அரசின் நிபந்தனைகளுக்கு முழுவதும் கட்டுப்படுவதாகவும், பேரணி குறித்த முழு விபரங்களையும் உறுதிமொழிப் பத்திரமாக தாக்கல் செய்ய மனுதாரருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Tags :