சாப்பிட்டுவிட்டு  பணம் கொடுக்காமல் சென்றதை தட்டிக் கேட்ட  ஹோட்டல் தொழிலாளி  கொலை 4 இளைஞர்கள் கைது.

by Editor / 23-12-2023 08:54:33pm
சாப்பிட்டுவிட்டு  பணம் கொடுக்காமல் சென்றதை தட்டிக் கேட்ட  ஹோட்டல் தொழிலாளி  கொலை 4 இளைஞர்கள் கைது.

தென்காசி மாவட்டம் கீழக்கலங்கள் பகுதியை சேர்ந்தவர  ஷேக் மைதீன் என்பவர் நாகர்கோவில் அருகே உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகிறார் இந்த நிலையில் சம்பவத்தன்று ஷேக் மைதீன் ஹோட்டலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார், அப்போது வடசேரி, ராமன்புதூர், ஆணை பத்தை, உள்ளிட்ட பகுதியை சேர்ந்த நான்கு இளைஞர்கள்  சாப்பிடுவதற்காக ஹோட்டளுக்கு  வந்தனர்,  அப்போது அவர்கள் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல் வெளியே சென்றதாக தெரிகிறது, அவர்களை ஷேக் மைதீன் தடுத்து நிறுத்தி உணவு சாப்பிட்டதற்கு பணம் கேட்டுள்ளார் இதனால், ஷேக் மைதீனுக்கும் பணம் கொடுக்காமல் சென்ற இளைஞர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது, இதில் ஆத்திரமந்த சுரேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து ஷேக் மைதீனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர், இதில் பலத்த காயம் அடைந்த சேக் மைதீன் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,  சேக் மைதீன் கொடுத்த புகாரின் பேரில்  சுரேஷ், நாகராஜன்,ஆறுமுகம், மகேஸ்வர் ஆகிய நான்கு பேர் மீது  கோட்டார் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகள் வழக்கு பதிவு செய்தனர், இந்த நிலையில் ஷேக் முஹைதீன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக பலியானார்.இந்த நிலையில் அவரது உடலை பிரேத பரிசோதனைசெய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கோட்டாறு போலீசார் தலைமறைவான நான்கு நபர்களை  தேடி வந்த நிலையில்,  இன்று அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags : சாப்பிட்டுவிட்டு  பணம் கொடுக்காமல் சென்றதை தட்டிக் கேட்ட  ஹோட்டல் தொழிலாளி  கொலை 4 இளைஞர்கள் கைது.

Share via
Logo