பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு

by Admin / 11-02-2022 02:36:41pm
பெரு நாட்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெருவில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்தில் 20 பேர் உயிரிழந்தனர்.

பாட்சா மாகாணத்தில் மலைப் பாதையில் சென்ற பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து 100 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது.

பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்த பேருந்தில் பயணித்த 20 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

படுகாயமடைந்த 33 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பலர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்

 

Tags :

Share via

More stories