கிராம ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அன்பளிப்புக்களை அள்ளிவழங்கிய ஊராட்சி மன்றத்தலைவி.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து ஊராட்சி அலுவலகம் சார்பில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடந்தது.இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்றத்தலைவி தனலெட்சுமி சரவணன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்களும், கிராம ஊராட்சியைச் சேர்ந்த தூய்மை பணியாளர்களும் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் கிராமத்தை சுத்தமாக வைக்க உதவும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் கிராம ஊராட்சியில் பணிபுரியும் 6 தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்த ஊராட்சி மன்றத்தலைவி தனலெட்சுமி சரவணன் தனது சொந்த செலவில் 25 கிலோ அரிசி பையை வழங்கினார். அதோடு ஒரு தாம்பூலத்தில் அல்வா, மிச்சர், பல்ப் மற்றும் போர்வையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்த கிராமசபை கூட்டத்திற்கு வந்த அனைத்து பொதுமக்களுக்கும் தாம்பூலம், அல்வா, மிச்சர், போர்வை மற்றுமு டிபன் பாக்ஸ் ஒன்றையும் வழங்கினார். கிராம சபை கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர்.
Tags : கிராம ஊராட்சி சிறப்பு கிராமசபை கூட்டத்தில் அன்பளிப்புக்களை அள்ளிவழங்கிய ஊராட்சி மன்றத்தலைவி.