கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெல் பயிர்களை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

by Staff / 17-10-2025 09:49:33am
கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெல் பயிர்களை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குருவை நெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்பொழுது மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. 

இந்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழை நீரில் சாய்ந்து முளைக்கத் தொடங்கியதால் விவசாயிகள் மிகப்பெரிய வேதனை அடைந்தனர்.   பாதிக்கப்பட்ட பயிர்களை கணக்கெடுப்பு நடத்தி உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில்  திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள குருவை நெல் பயிர்களை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வேளாண் உதவி அலுவலர் ஆகியோர் நேரடியாக சென்று கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.

 

Tags : கனமழையால் பாதிக்கப்பட்ட குறுவை நெல் பயிர்களை கணக்கெடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு

Share via