விராட் கோலி தலைமையில் 15 வீரர்கள் பட்டியல்

by Editor / 09-09-2021 08:33:55pm
விராட் கோலி தலைமையில் 15 வீரர்கள் பட்டியல்

ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியின் விராட் கோலி தலைமையிலான 15 வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், வருண் சக்கரவரத்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் அக்டோபர் 17ம் தேதி தொடங்கி நவம்பர் 14ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான அணியில் மொத்தம் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ரோகித் ஷர்மா துணை கேப்டனாகவும், அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வீரர்கள் பட்டியல்விராட் கோலி (கேப்டன்), ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி மற்றும் மாற்று வீரர்களாக ஷ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாகூர், தீபக் சாஹர் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர். இதில் தமிழக வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்தது சிறப்பு வாய்ந்ததாகும். அஷ்வின், கடந்த 2017ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணிக்காக டி20, ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. இருந்த போதிலும் ஐபிஎல் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடியதால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ். தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருப்பதாவது:

நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக எம்.எஸ். தோனி செயல்படுவார். பிசிசிஐ-யின் கோரிக்கையை ஏற்று இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட எம்.எஸ். தோனி சம்மதித்துள்ளார். இது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. டி20 உலகக்கோப்பை தொடரில் தோனி இந்திய அணியுடன் இணைந்து செயல்படுவார். இந்திய அணிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் ரவி சாஸ்திரி மற்றும் பிற பயிற்சி ஊழியர்களுடன் இணைந்து எம்.எஸ்.தோனி செயல்படுவார் என்று கூறியுள்ளார்.

 

Tags :

Share via