காவலர் செயலியை 13 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்

by Editor / 09-09-2021 08:37:37pm
காவலர் செயலியை 13 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர்

தமிழகத்தில் 14 கணினி இணைப்பு கட்டுப்பாடுகள் இருக்கக் கூடிய நவீன தரவுத்தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் 82 லட்சம் அவசரகால அழைப்புகள் பெறப்பட்டுள்ளன. இதில் 59,193 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இதில் 13 லட்சம் "காவலன்" செயலி பயன்படுத்துவோரின் தகவல்களும் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் தெரிவித்துள்ளார்.

மரணம் ஏற்படுத்திய விபத்துக்கள்: 2019ல் 10,259. இது 2020ல் 7,559. நடப்பு ஆண்டு ஜூன் வரை 6 ஆயிரம்.

இந்த தரவுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த மையத்திற்கு இந்திய தர சான்றிதழ் பெறும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் விரைவில் நிறைவடையும் என்றார்.

சட்டசபையில் இன்று தமிழ்நாடு காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பை முதல்வர் தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அனைத்து காவல் நிலையங்கள் மண்டல இணையதள ஆய்வகங்கள் மற்றும் மாநில இணையதள ஆணை மையம் ஆகியவற்றிற்கு இணையதள தடவியல் சாதனங்கள் கொள்முதல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

மாநில காவல் நவீன கட்டுப்பாட்டு அறை மற்றும் அவசரகால உதவி மையத்திற்கு இந்திய தர சான்றிதழ் பெறும் பணி விரைவில் நிறைவடையும்.

2019 2021 ஜூன் மாதம் வரையில் 7158 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதில் 2019ம் ஆண்டு போக்ஸோ கற்பழிப்பு வழக்குகள் மட்டும் 1742 வழக்குகளும் மற்றவை 654 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.

2020 ஆண்டு போக்ஸோ கற்பழிப்பு வழக்குகள் 2229, மற்றவை 861 பதியப்பட்டுள்ளது. 2021 ஜூன வரை போக்ஸோ கற்பழிப்பு வழக்குகள் 1252, மற்றவை 420 பதியப்பட்டுள்ளது.மொத்தமாக 2019ம் ஆண்டு 2396 வழக்குகளும், 2020ம் ஆண்டு 3090 வழக்குகளும், 2021 ஜூன் வரை 1672 வழக்குகளும் பதியப்பட்டுள்ளது.

பாலியல் பலாத்காரம், வரதட்சணை மரணம், கணவர் மற்றும் அவரது உறவினர்களால் கொடுமைப்படுத்துதல் மற்றும் மானபங்கம் படுத்துதல் போன்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 4967 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது

கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் 370 வழக்குகளும், வரதட்சணை 28 வழக்குகளும், கணவர் மற்றும் அவரவது உறவினர்கள் கொடுமைப்படுத்துதல் வழக்குகள் 781, மானபங்கம் தொடர்பாக 803 வழக்குகள் என்று மொத்தமாக 1982 வழக்குகள் பதிவாகியுள்ளது.

2020 ஆண்டு ஆண்டு பாலியல் பலாத்காரம் 404 வழக்குகளும், வரதட்சணை 40 வழக்குகளும், கணவர் மற்றும் அவரவது உறவினர்கள் கொடுமைப்படுத்துதல் வழக்குகள் 689, மானபங்கம் தொடர்பாக 892 வழக்குகள் என்று மொத்தமாக 2025 வழக்குகள் பதிவாகியுள்ளது

2021 ஜூன் மாதம் வரை பாலியல் பலாத்காரம் 197 வழக்குகளும், வரதட்சணை 11 வழக்குகளும், கணவர் மற்றும் அவரவது உறவினர்கள் கொடுமைப்படுத்துதல் வழக்குகள் 336, மானபங்கம் தொடர்பாக 803 வழக்குகள் என்று மொத்தமாக 960 வழக்குகள் பதிவாகியுள்ளது.குடும்பத்தகராறு, வாய்த்தகராறு, முன் விரோதம், காதல் மற்றும் பாலியல் காரணம், பணம் கொடுக்கல் வாங்கல், நிலத்தகராறு, குடிபோதை தகராறு, வரதட்சினை, அரசியல் காரணங்கள், இதர காரணங்கள், ஜாதி பாகுபாடு ஆகிய காரணங்களால் 2019ம் ஆண்டில் 1678 கொலைகளும், 2020ல் 1597 கொலைகளும் நடந்துள்ளன. நடப்பு ஆண்டில் ஜூன் வரை 777 கொலைகள் நடந்துள்ளன.

கொரோனா பெருந்தொற்று காலக்கட்டத்திலும், தமிழ்நாடு காவல்துறையினர் முன்களப் பணியாளர்களாக களத்தில் நின்று அரசின் நோக்கம் நிறைவேறவும், பொதுமக்களை பாதுகாக்கவும் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டனர்.

காவல்துறையின் அனைத்து முயற்சிகளும், காவல்துறையின் செயல்பாடுகளை சிறப்பாக மேம்படுத்துதல் மற்றும் சேவை வழங்குவதில் மனிதாபிமானத்துடன் கூடிய நட்புறவோடு பொதுமக்களை அணுகுதல் போன்ற குறிக்கோளை நோக்கியதாக இருத்தல் வேண்டும்.

தகுந்த திட்டமிடுதல் மற்றும் முறையான முயற்சிகள் மூலம் இத்தகைய உன்னத குறிக்கோள்களை தமிழக காவல்துறை நிச்சயம் எட்டும் என்ற நம்பிக்கை இந்த அரசுக்கு உள்ளது. பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தமிழ்நாடு காவல்துறைக்கு இந்த அரசு எப்போதும் வழிகாட்டியாகவும், உறுதுணையாகவும் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via