ரம்ஜான் பண்டிகை மார்ச்- 21 ,சனிக்கிழமை அன்று கொண்டாடப்படும்
வியாழக்கிழமை அன்று வானம் மேகமூட்டத்துடன் இருந்ததாலும் பிறை தென்படாததாலும் ரமலான் மாதம் 30 நாட்களாக முழுமை அடைகிறது. அதனால் இந்தியாவில் பிறை தென்படாததால் ஈத் உல் பித்ர்- ரம்ஜான் பண்டிகை மார்ச்- 21 ,சனிக்கிழமை அன்று கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார். சென்னை மற்றும் புதுச்சேரியில் நாளை ரம்ஜான்பண்டிகை கொண்டாடப்படும். கேரளாவில் பிறை தென்பட்டதால் இன்று வெள்ளிக்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Tags :


















