12 வயது சிறுமி.. 3 மாதத்தில் 200 பேர் பாலியல் வன்கொடுமை

மும்பையில் உள்ள வசாய் நைகாவில் சட்டவிரோதமாக பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, அங்கிருந்து 12 வயது பங்களாதேஷ் சிறுமி ஒருவர் போலீசாரால் மீட்கப்பட்டார். விசாரணையில், அந்த சிறுமியை கடத்தல்காரர்கள் சிலர் குஜராத் மாநிலத்திற்கு அழைத்து சென்று, பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளனர். மேலும், அந்த சிறுமியை 3 மாதத்தில் 200 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இது தொடர்பாக போலீசார் 10 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :