"தேர்தல் ஆணையத்தை மோசடி இயந்திரமாக மாற்றிய பாஜக" - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

by Editor / 11-08-2025 01:02:14pm

தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றியுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும், “வாக்கு திருட்டை ஆதாரத்துடன்  ராகுல் காந்தி அம்பலப்படுத்தி உள்ளார். இந்தப் போராட்டத்தில் திமுக தோளோடு தோள் நிற்கிறது. இந்தியாவின் ஜனநாயகத்தை பாஜக பட்டப்பகலில் கொள்ளையடிப்பதை நாங்கள் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்'' என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

Tags :

Share via