டெல்லி எல்லைகளில்   விவசாயிகள் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்-

by Editor / 26-05-2021 06:51:18pm
டெல்லி எல்லைகளில்   விவசாயிகள் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்-


மத்திய அரசின் விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி இன்று டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். மேலும் பிரதமர் மோடியின் உருவபொம்மைகளையும் எரித்தனர்.
மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைகளில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டம் 6 மாதங்களை எட்டியுள்ளது.
இந்நிலையில் பிரதமர் மோடி பதவியேற்று  7 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை நாடு முழுவதும் கறுப்பு தினமாக கடை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
டெல்லியில் போராடும் விவசாயிகளின் இந்த அழைப்புக்கு திமுக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகாலி தள், இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனடிப்படையில்  நாடு முழுவதும் விவசாயிகள் வீடுகள், வாகனங்களில் கறுப்பு கொடிகளை ஏற்றி எதிர்ப்பை தெரிவித்தனர்.
மேலும் சென்னையில் சிபிஎம் கட்சி அவலுலகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டன. டெல்லி எல்லைகளில் போராடும் விவசாயிகள் கறுப்பு கொடிகளுடன் இன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தினர். அப்போது பிரதமர் மோடியின் உருவபொம்மைகளும் எரிக்கப்பட்டன.

 

Tags :

Share via