கதவணையை வந்தடைந்த காவேரி மலர் தூவி வணங்கி  வரவேற்றமக்கள்.

by Staff / 22-06-2025 10:49:00am
கதவணையை வந்தடைந்த காவேரி மலர் தூவி வணங்கி  வரவேற்றமக்கள்.

மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மேலையூரில் அமைந்துள்ள காவிரி ஆற்றின் கடைசி கதவணையை இன்று வந்தடைந்தது காவிரி நீர்.  குடகு மலையில் உருவாகும் காவேரி ஆறு பல்லாயிரம் மைல்கள் கடந்து மயிலாடுதுறை  மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகார் கடலில் சங்கமிக்கும். அதற்கு முன்னர் மேலையூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது.காவேரி தண்ணீர் இந்த கதவணையை வந்தடைந்த பின்னர் தேக்கி வைத்து ஓவ்வொரு பாசன ஆறுகள் மற்றும் கிளை வாய்க்கால்களுக்கும், பெருந்தோட்டம் ஏரிக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் காவேரியில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று காலை மேலையூர் கடைசி கதவணை வந்தடைந்தது. அப்போது அங்கு காத்திருந்த பொதுபணிதுறை அதிகாரிகள் மற்றும் விவசாயிகள் காவேரி தண்ணீரை படையலிட்டும் மலர்தூவியும் வணங்கி வரவேற்றனர்.

 

Tags : கதவணையை வந்தடைந்த காவேரி மலர் தூவி வணங்கி  வரவேற்றமக்கள்.

Share via