2 எம்எல்ஏக்களும் குணமடைய வேண்டும்: அன்புமணி

மருத்துவமனையில் உள்ள 2 எம்எல்ஏக்களும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் குணமடைய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக கௌரவத் தலைவரும் எம்எல்ஏவுமான ஜி.கே.மணி, சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் ஆகியோர் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று சேலத்தில் நடைபெறும் பாமக மாவட்ட பொதுக்குழுவில் இருவரும் பங்கேற்கவில்லை. அவர்களது உடல்நிலை விரைவில் சீராக வேண்டும் என அன்புமணி தெரிவித்துள்ளார்.
Tags :