மரியில் நடைபயணத்தை தொடங்கிய அண்ணாமலை
குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை நடைபயணம் தொடங்க நேற்று இரவு கன்னியாகுமரி வந்தார். இன்று காலை 9 மணிக்கு அவர், 77வது சுதந்திர தின விழாவையொட்டி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள காந்தி நினைவு மண்டபத்துக்கு சென்றார். அங்குள்ள பாரத மாதாவின் முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு காந்தி நினைவு மண்டபத்துக்குள் சென்ற அண்ணாமலை, அங்குள்ள காந்தியின் அஸ்தி கட்டத்தில் (நினைவிடம்) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன், எம். ஆர். காந்தி எம். எல். ஏ. , குமரி மாவட்ட பா. ஜ. க. தலைவர் தர்மராஜ், நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலரும் குமரி மாவட்ட பா. ஜ. க. பொருளாதார பிரிவு தலைவருமான அய்யப்பன், மாவட்ட பா. ஜ. க. இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநில செயலாளர் மீனாதேவ், அகஸ்தீஸ்வரம் ஒருங்கிணைந்த ஒன்றிய பார்வையாளர் சுபாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்டபட்ட களியக்காவிளை சென்ற அண்ணாமலை அங்கிருந்து நடைபயணத்தை தொடங்கினார். தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக சென்ற அவர், மக்களை சந்தித்தார். அவருக்கு ஏராளமானோர் வரவேற்பு கொடுத்தனர்.
Tags :