ரீல்ஸ் வீடியோ எடுத்த மருமகள்.. மண்டையை உடைத்த மாமனார், மாமியார்
பீகாரை சேர்ந்தவர் சுனிதா தேவி. சமூகவலைதளங்களில் ஆர்வமாக இயங்கும் இவர் அண்மையில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டார். இதை பார்த்த அவரின் மாமனார், மாமியாருக்கு கோபம் வந்தது. இது கலாச்சாரம் மற்றும் குடும்ப கெளரவத்தை கெடுக்கும் என கூறி இருவரும் கனமான குச்சியால் சுனிதாவை தாக்கி மண்டையை உடைத்தனர். காயமடைந்த அவருக்கு தலையில் கட்டுப்போடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகாரில் போலீஸ் விசாரிக்கிறது.
Tags :


















