விமான விபத்தில் டார்சான் நடிகர் ஜோ லாரா  மரணம்

by Editor / 31-05-2021 04:19:18pm
விமான விபத்தில் டார்சான் நடிகர் ஜோ லாரா   மரணம்



பிரபல ஹாலிவுட் நடிகர் ஜோ லாரா விமானவிபத்தில் மரணம் அடைந்தார். அவரது மனைவி க்வென் ஷாம்ப்ளின் லாராவும் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
டென்னெஸ்ஸே என்ற சிறிய ரக விமானத்தில் ப்ளோரிடாவுக்கு புறப்பட்டிருக்கிறார் லாராவும் தனது மனைவியுடன். புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகி ஏரிக்குள் விழுந்து மூழ்கியது. இதையடுத்து இதில் பயணித்த 7 பேரும் இறந்திருக்க கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரூத்தர்ஃபோர் மீட்புக்குழு இந்த தகவலை தெரிவித்திருக்கிறது.உடைந்த விமான பாகங்கள் மற்றும் உல்களை தேடி வருவதாகவும் மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். 1989ல் ‘டார்சான் இன் மன்ஹாட்டன்’ எனும் அமெரிக்க தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ்பெற்றர் லாரா. 1996 முதல் 1997 வரையிலும் வெற்றிகரமாக ஓடிய, ‘டார்சன் – தி எபிக் அட்வெஞ்சர்ஸ்’ தொலைக்காட்சி தொடரிலும் நடித்து புகழ்பெற்றார்.டார்ஸான், அமெரிக்கன் சைபாக்-ஸ்டீல் வாரியர், ஸ்டீல் ஃ ப்ரண்டியர், ஹாலோக்ராம் மேன் படங்களிலும் நடித்துள்ளார் லாரா.
கடந்த 2018ல் திருமணம் செய்துகொண்ட லாரா, மனைவியுடன் சேர்ந்து கிறிந்தவர்கள் உடல் எடை குறைப்பு குழு ஒன்றையும் தொடங்கி நடத்தி வந்தார். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள்.ஜோ லாரா-க்வென் மரணம் அவரது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

 

Tags :

Share via

More stories