மயிலாடுதுறையில் முன்விரோதம் காரணமாக இளைஞரை படுகொலை செய்த 4 பேர் கைது.
மயிலாடுதுறை சீனிவாசபுரத்தில் மேலபட்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த சதீஷ் (36) என்ற இளைஞர் முன்விரோதம் காரணமாக நேற்று வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதில் தொடர்புடைய நெய்க்குப்பை பகுதியைச் சேர்ந்த மாதவன்(33), பிரபு (38), இளவரசன் (27) ரகு (24) ஆகிய நால்வரை மயிலாடுதுறை போலீசார் கைது செய்தனர்.தப்பியோடிய தினேஷ் என்பவரை தேடி வருகின்றனர்.
Tags :



















