நெல் கொள் முதலில் ஈர பதத்திற்கான தளர்வை வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை நிராகரிப்பு- முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்
வடகிழக்கு பருவமழையின் காரணமாக அறுவடை செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் நெல் கொள்முதல்செய்வதற்கான அனுமதிக்கப்பட்ட ஈரப்பத அளவை 17 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக உயர்த்தக் கோரி தமிழக அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.. ஆனால் அதனை ஏற்காமல் நிராகரித்துள்ளதாக தமிழக முதலமைச்சர் மு .க .ஸ்டாலின் தெரிவித்துள்ளார்... டெல்டா மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் அறுவடை செய்யப்பட்ட நெல் அதிக ஈரப்பதத்துடன் உள்ளது என்றும் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க நெல் கொள்முதலில் ஈர பதத்திற்கான தளர்வை வழங்குமாறு தமிழக அரசு அக்டோபர் 19ஆம் தேதி ஒன்றிய உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கு கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் இதனைத் தொடர்ந்து அக்டோபர் 25 ,28 வரை ஒன்றிய குழுக்கள் தமிழகத்தில் கள ஆய்வு மேற்கொண்டு நெல் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்த பின்னர் ஈர தளர்வுக்கான எந்த உத்தரவும் ஒன்றிய அரசிடம் இருந்து வரவில்லை என்றும் நேற்று தமிழகம் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருந்ததாகவும் அந்த கோரிக்கை தற்பொழுது நிராகரிக்கப்பட்டு இருப்பது விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.. மத்திய அரசு தனது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளின் துயரங்களை உடனடியாக போக்க உத்தரவு பிறக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
Tags :


















