தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் டிசம்பர் 4- ஆம் தேதி சேலத்தில் பரப்புரை மேற்கொள்வதற்கு அனுமதி கோரி மனு
தமிழக வெற்றி கழகம் சார்பில் அதன் தலைவர் விஜய் டிசம்பர் 4 ஆம் தேதி சேலத்தில் பரப்புரை மேற்கொள்வதற்கு காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரி கட்சியினர் மனு அளித்துள்ளனர். கரூர் கூட்ட நெரிசல் நிகழ்வை அடுத்து விஜய் மேற்கொள்ள இருந்த பரப்புரைகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. ஒரு மாத இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அவர் பரப்புரை மேற்கொள்வதற்காக சேலத்தில் அனுமதி வேண்டி கோரிக்கை மனு அளித்துள்ளனர். இந்நிலையில் த. வெ. க விற்கு தமிழகம் முழுவதும் பரப்புரை செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் சமமான விதிமுறைகளை வகுத்து அனுமதி வழங்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. சேலத்தில் விஜய் மேற்கொள்ள இருக்கும் பரப்புரை கூட்டத்திற்கு அனுமதி கோரிய மனு மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது.
Tags :


















