அமெரிக்காவில் எச்1-பி விசா பட்டியல்... சந்தை ஆராய்ச்சி ஆய்வாளர் பணி சேர்ப்பு...
அமெரிக்காவில் எச்1-பி விசா பட்டியலில் சந்தை ஆராய்ச்சி ஆய்வாளர்களும் இடம் பெறுவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்1.பி. விசா என்பது வெளிநாடுகளில் இருந்து வேலை தொடர்பாக அமெரிக்காவுக்கு செல்பவர்களுக்கு வழங்கப்படுவது. அதன்படி ஒவ்வொரு ஆண்டும் 85 ஆயிரம் எச் -1 பி விசாக்களை அமெரிக்கா வழங்குகிறது.
அதில் 65 ஆயிரம் பேர் "சிறப்புத் தொழில்களில்" பட்டியலில் உள்ளவர்களுக்கும், 20 ஆயிரம் பேர் முதுகலை அல்லது அமெரிக்காவில் உயர் பட்டப்படிப்பை முடித்த வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இதில் சிறப்பு தொழில் பட்டியலில் சாப்ட்வேர் நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் வரையறுக்கப்பட்டுள்ள நிலையில், இப்படியலில் தற்போது சந்தை ஆராய்ச்சி ஆய்வாளர் பணியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனி அமெரிக்காவில் எச்1-பி விசா பெற சந்தை ஆராய்ச்சி ஆய்வாளர்களும் தகுதி பெறுவர்.
Tags :