துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த 17 வயது மாணவர்

by Editor / 18-09-2021 07:47:53pm
 துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்த 17 வயது மாணவர்

உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பகத்சிங். இவர் பெங்களூரு அருகேள்ள பேகூருவில் உள்ள ஆர்.டி.நகர் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதில் ராகுல் பண்டாரி என்ற மகன் இருக்கிறார். இவர் ராணுவ கல்லூரியில் பியூசி முதலாம் வகுப்பு படித்து வந்தார். ராணுவ அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார்.

இவர் உத்தரகாண்ட் மாநிலத்திலிருந்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூருவிற்கு வந்து வசிக்கிறார். ராணுவ பணியில் ஓய்வு பெற்ற நிலையில், பெங்களூருவில் பிரபல நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். ராகுல் தினமும் அதிகாலை எழுந்து நடைபயிற்சி, ஓடுவதை வழக்கமாக வைத்து இருந்தார். அதன் படி, நேற்று அதிகாலை 3 மணிக்கு வழக்கம் போல் ராகுல் வீட்டில் இருந்து வெளியே புறப்பட்டு சென்றார்.

இவர் வழக்கமாக வெளியே சென்றாலே தனது தாயிடம் சொல்லிவிட்டு தான் செல்வார். ஆனால் நேற்று அதிகாலையில் மட்டும் தனது தாயிடம் எதுவுமே சொல்லாமல் வெளியே புறப்பட்டு சென்று விட்டார்.

இதனால் பதறிப் போன ராகுலின் தாயார் அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டார். ஆனால் அவரின் செல்போனை, எடுத்து அவர் பேசவில்லை. இதனால் ராகுலின் பெற்றோர் உடனே காவல் நிலையத்தில் மகனை காணவில்லை என புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ராகுல் தீவிரமாக தேடி வந்தனர்.

அப்போது சதாசிவம் நகர் காவல் எல்லைக்கு உட்பட்ட இந்திய விமானப்படை அருகே பஸ் நிறுத்தம் முன்பாக தலையில் குண்டு காயத்துடன் ராகுல் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த வாகன ஓட்டிகள் உடனே காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். பிறகு காவலர்கள், உடனே சென்று பார்த்த போது உயிரிழந்து கிடப்பது ராகுல் என்பது தெரிய வந்து உள்ளது.

பிறகு ராகுலின் பெற்றோருக்கு காவல் துறையினர் தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது மகன் ராகுல் தலையில் குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில் கிடந்தார். அதுமட்டுமின்றி ராகுல் அருகே ஒரு துப்பாக்கியும் கிடந்தது. உடனே காவல் துறையினர் தடய அறிவியல் நிபுணர்களுக்கு தகவல் கொடுத்தனர். அங்கு இருந்த துப்பாக்கி உள்ளிட்ட சில பொருள்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் ராகுலின் செல்போனை கைப்பற்றி காவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ராகுலின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அலுவலர் என்பதால் அவரிடம் இருந்த உரிமத்துடன் கூடிய துப்பாக்கியை வைத்து தற்கொலை செய்தது தெரியவந்தது.

 

Tags :

Share via