நண்பர்களுடன் குளிக்க சென்ற இளைஞர் பலி

நாமக்கல் மாவட்டம் சாணார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி தனது நண்பர்களான மற்றொரு கார்த்தி மற்றும் சுரேஷ் ஆகிய மூன்று இளைஞர்கள் காவிரி ஆற்றில் குளிப்பதற்காக சேலம் மாவட்டம் சங்ககிரி அருகேயுள்ள வேலாத்தாகோவில் பகுதியிலுள்ள கதவனை மின் நிலைய நீர்த்தேக்க பகுதியில் குளிக்கச் சென்றனர். அப்பொழுது நீரோட்டத்தை ரசித்த கார்த்தி என்ற இளைஞர் தனக்கு நீச்சல் தெரியும் என்று கூறிக்கொண்டு ஆழமான பகுதிக்கு சென்றார். அப்போது நீரில் மூழ்கி தத்தளித்த கார்த்தியை மற்ற இளைஞர்கள் காப்பாற்ற முயற்சித்தும் முடியாமல் அருகில் இருந்தவர்களை சத்தம் போட்டு கூப்பிடவே அவர்கள் வருவதற்குள் இளைஞர் நீரில் மூழ்கினார். இதனையடுத்து நீர் தேக்க கணவனை அலுவலரிடம் கூறி கதவனை பகுதியில் இருந்து நீர் வெளியேற்றியதை நிறுத்தி மீனவர்கள் உதவியுடன் கார்த்தியை தேடும் பணியை தொடங்கினர். சுமார் 2 மணி நேர தேடுதலுக்கு பிறகு கார்த்தி சடலமாக மீட்கப்பட்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தேவூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து உயிரிழந்த கார்த்தியுடன் வந்த நண்பர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :